தமிழ் மாதம் பன்னிரண்டில் இரண்டாம் மாதமான வைகாசி மே 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ல் நிறைவடைகிறது. பொதுவாகவே இந்த மாதம் முருக வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். ஏனெனில் வைகாசி விசாகம் வருகிறது. முதலில் இந்த மாதத்தின் பலன்களை அறிய கிரங்களின் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். குரு பகவான் மிதுனத்திலும், சுக்கிரன் மீனத்திலும், மேஷத்தில் புதனும், ரிஷபத்தில் சூரியனும் இருக்கிறார்கள். சனி - ராகு பகவான் கும்பத்தில் தொடர செவ்வாய் கடகத்திலும், கேது பகவான் சிம்மத்தில் இருக்கிறார். இந்த மாதம் குறிப்பாக சிம்மம், கும்பம், மகரம், கடகம் ராசிக்காரர்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
வைகாசி மாத ராசிபலன் 2025
மேஷம்
இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாகும். உங்கள் ராசியில் குரு பகவான் மூன்றாம் இடத்திற்கு குரு பகவான் வந்திருப்பதால் லாபஸ்தானம் காரணமாக பொருளாதாரம் நன்றாக இருக்கும். வருமானம் உயரும், தொழில் வளர்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லை வரும். துர்க்கை வழிபாடு செய்தால் உங்களுடைய துயரங்கள் நீங்கும்.
ரிஷபம்
இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கப் போகிறது. வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க போகிறீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். இம்மாதம் புதன் மிதுன ராசிக்கு செல்வதால் மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சியாக இருக்கும். இம்மாதம் நந்தி வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்
இந்த வருடம் உங்கள் ராசியிலேயே குருபகவான் இருக்கிறார். எனவே இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும், விட்டு விலகிய கூட்டாளிகள் இணைவார்கள், பண விரயம் குறைந்துவிடும், வருமானம் உயரும். குரு பகவானை தொடர்ந்து வழிபடுங்கள்.
கடகம்
இந்த மாதம் உங்களுடைய தொழில் மந்தமாக இருக்கலாம். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வைகாசி 25ற்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த மாதம் முழுக்க எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை, வேலை பளு அதிகரிக்கும. நாக தெய்வ வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதம் லாபம் சிறப்பாக இருக்கும். மன குழப்பம் ஏற்படலாம். எனவே தெளிவாக சிந்தனை தேவை. விநாயகப் பெருமானை அருகம்புல்லுடன் வழிபாடு செய்யவும்.
கன்னி
இம்மாத கன்னி ராசிக்காரகளுக்கு சுப விரயம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. 10ல் குரு இருப்பதால் பதவி மாற்றங்களும் உண்டு, பொருளாதார நிலை மேம்படும். உடன் பிறப்புகளுடனான மனக்கசப்பு விலகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம்.
துலாம்
உங்கள் ராசியை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் சிறக்கும். புதனின் பெயர்ச்சிக்கு பிறகு மிகுந்த நன்மைகளை பெற போகிறீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும், கல்யாண கனவு நிறைவேறும். இம்மாதம் அனுமனை வழிபடுங்கள்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு இம்மாதம் வாக்கு மேன்மை உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும், செல்வ வளம் பெருகும், நட்பு வட்டாரம் விரிவடையும், எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. தங்கம், வெள்ளி வாங்க முனைப்பு காட்டுவீர்கள். முருகப்பெருமானை தவறாமல் வழிபடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை இருப்பதால் செய்ய திட்டமிட்ட காரியம் நடக்கும். அயல்நாடு கனவு கனிந்து எட்டக்கூடும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்ளவும்.
மகரம்
உங்கள் ராசியில் 6ல் குரு இருக்கிறார். எனினும் திட்டமிட்ட சில காரியங்கள் திசை மாறி செல்லலாம். கொள்கை பிடிப்போடு செயல்படுவதில் சிரமம் இருக்கும். மனக்கவலை அதிகரிக்கும், யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள், எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. அனுமனை வழிபட்டு ஆனந்தம் பெற முயற்சிக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், பொருளாதார பற்றாக்குறை அகலும், திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். சில சில பிரச்னை வரும். துணையுடனான சிக்கலை தவிர்க்கவும்.
மீனம்
ஆரோக்கிய தொல்லையை எதிர்கொள்வீர்கள். வாங்கல் கொடுக்கலில் தலையிடாதீர்கள். உங்களுடைய சிந்தனைக்கு வெற்றி கிடைக்கும். எனினும் விரயங்கள் அதிகரிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை பெறவும். சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபடுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
மேலும் படிங்ககுரு பெயர்ச்சி பலன் 2025 : குரு பகவான் பார்வை கிடைத்தால் கோடி நன்மை; எந்த ராசிக்கு யோகம் ?
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation